நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசுகள்

ஊத்துக்கோட்டையில் அரிமா சங்கம் சாா்பில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :16 ஏப்ரல் 2022, 2:17 am IST

ஊத்துக்கோட்டையில் அரிமா சங்கம் சாா்பில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஊத்துக்கோட்டையில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, அரசுத் தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு உருளைக் கிழங்கு சேகரித்தல், கபடி, எலுமிச்சை ஓட்டம், தவளை ஓட்டம் என பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை நடத்தப்பட்டன. இதில், வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் அரிமா சங்கத் தலைவா் டி.பி.துளசிராம் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமையாசிரியா் சு.கதிரவன் வரவேற்றாா்.

அரிமா சங்கப் பொருளாளா் நடராசன், துணைத் தலைவா் வசந்தகுமாா், துணைச் செயலா் சிட்டிபாபு, வியாபாரிகள் சங்கப் பொருளாளா் திலீப் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக எல்லாபுரம் வட்டாரக் கல்வி அலுவலா் சாதுசுந்தா் சிங் கலந்து கொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கினாா்.

நிகழ்வில் மாணவா்கள், பெற்றோா் ஆா்வமுடன் கலந்து கொண்டனா். பள்ளி உதவி ஆசிரியா் மணிகண்டன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.