பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

மதுரை: காயமடைந்தவர்களுக்கு அமைச்சர்கள் நேரில் ஆறுதல்

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வில் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களை அமைச்சர்கள் பி. மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். 

News image
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
Updated On :16 ஏப்ரல் 2022, 7:03 am

DIN

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வில் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களை அமைச்சர்கள் பி. மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். 

மதுரை சித்திரை திருவிழா கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் சனிக்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற லட்சக்கணக்கான பொதுமக்கள் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு முடிந்து திரும்பும்போது கூட்டநெரிசலில் ஏற்பட்டது.

இதில், தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் சேர்ந்த செல்வம் மற்றும் ஜெயலட்சுமி(62) இருவரும் கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமடைந்தனர். அவர்களை போலீஸார் மீட்டு ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே இருவரும் உயிரிழந்தனர். 

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன்.

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன்.

மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த  திண்டுக்கல் - முனியம்மாள், மூணாறு - பழனி, மதுரை மாவட்டம் செக்கானூரணி - மாரியம்மாள், விரிசல்குளம் - சத்யா, சம்மட்டிபுரம் - ஜெயலட்சுமி, அம்மாபட்டி - மணிமேகலை, ஆவியூர் - வள்ளி, வில்லூர்- பஞ்சவர்ணம், செல்லூர் - மகேஸ்வரி மற்றும் முத்து கிருஷ்ணவேணி, திருமங்கலம் சுதந்திர மணி ஆகிய 11 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த வணிகவரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இது குறித்து அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் நிவராணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். இதேபோல பலத்த காயமடைந்த குடும்பத்தினருக்கு  தலா ரூ. 2 லட்சமும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் வழங்கவும் ஆணை பிறப்பித்துள்ளார். காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் செலவை அரசே ஏற்கும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.