சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் சம்பந்தம் இல்லை: செல்லூர் ராஜூ

சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் சம்பந்தம் இல்லை என முடிவாகி விட்டத்து என்றும், இதுவரை வைகை ஆற்றில் அழகர் இறங்கும்போது எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை.
சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் சம்பந்தம் இல்லை: செல்லூர் ராஜூ
Published on
Updated on
1 min read

மதுரை: சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் சம்பந்தம் இல்லை என முடிவாகி விட்டத்து என்றும், இதுவரை வைகை ஆற்றில் அழகர் இறங்கும்போது எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை. ஆனால் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஆற்றில் 2 பேர் உயிரிழந்தது மோசமான சம்பவம் என்று  முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். 

மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மதுரை மாநகர அதிமுகவின் பகுதி மற்றும் பேரூராட்சி கழக நிர்வாகிகளுக்கான அமைப்பு தேர்தல் நடைபெற்றது. 
 
முன்னதாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வைகை ஆற்றில் அழகர் இறங்கும்போது ஆற்றில் 2 பேர் உயிரிழந்தது மோசமான சம்பவம். இந்த சம்பவத்திற்கு மாவட்ட நிர்வாகம், காவல்துறை, பொதுப்பணித்துறை தான் காரணம். இதற்கு அவர்களே முழுப்பொறுப்பேற்க வேண்டும். 

அழகரை பொதுமக்கள் தரிசிக்க மாவட்ட நிர்வாகம் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை. முக்கியஸ்தர்கள், அரசு அதிகாரிகளுக்கு பாதை ஒதுக்கியவர்கள், மக்கள் செல்வதற்கு பாதை வசதி ஏற்படுத்தித் தரவில்லை. ஆற்றில் தண்ணீர் வரத்தை பொதுப்பணித் துறை அதிகாரிகள் குறைத்திருக்கலாம். பனையூர் கால்வாய்க்கு தண்ணீர் செல்லும் ஷட்டரை தண்ணீரை வெளியேற்றி இருக்கலாம். அதை மாவட்ட நிர்வாகமோ, பொதுப்பணித்துறையோ செய்யவில்லை. இந்த சம்பவத்திற்கு அனைத்துத் துறைகளும் முழு பொறுப்பேற்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் அளிக்க வேண்டும்.

சசிகலா குறித்தும் நீதிமன்ற தீர்ப்பு குறித்தும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் சம்பந்தம் இல்லை என முடிவாகி விட்டது. நாட்டில் எத்தனையோ பிரச்னைகள் உள்ளது. அதையெல்லாம் விட்டுவிட்டு இப்படியொரு கேள்வியை கேட்கிறீர்கள். நாட்டில் நடப்பவை குறித்து எதிர்க்கட்சிகளிடம் கேளுங்கள் என பதற்றத்துடன் பதிலளித்தார் செல்லூர் ராஜூ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com