புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

சென்னையில் சப்தமில்லாமல் அதிகரிக்கும் ஆபத்து

சென்னையில் பெரும்பாலான இடங்களில் மக்கள் முகக்கவசம் இல்லாமல் செல்வதை பார்க்க முடிகிறது. காரணம் சென்னையில்தான் கரோனா பாதிப்பு குறைந்துவிட்டதே என்ற அலட்சியம்தான்.

News image
சென்னையில் சப்தமில்லாமல் அதிகரிக்கும் ஆபத்து
Updated On :20 ஏப்ரல் 2022, 12:31 pm

DIN


சென்னை; சென்னையில் பெரும்பாலான இடங்களில் மக்கள் முகக்கவசம் இல்லாமல் செல்வதை பார்க்க முடிகிறது. காரணம் சென்னையில்தான் கரோனா பாதிப்பு குறைந்துவிட்டதே என்ற அலட்சியம்தான்.

உண்மைதான், ஏப்ரல் முதல் வாரத்துக்கு முன்பு வரை சென்னையில் கரோனா பாதிப்பு குறைந்துதான் வந்தது. 100க்கும் கீழ்தான் கரோனா நோயாளிகள் இருந்தனர். அரசு மாவட்ட மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளே இல்லாத நிலையும் உருவானது.

மக்களும் அடடா சென்னையை விட்டு கரோனா ஓடிவிட்டது என்று நிம்மதிபெருமூச்சு விட்டனர். ஆனால் என்ன செய்வது, நாம் நினைப்பது போலவே அனைத்தும் நடக்கிறது. இல்லையே அதுபோலத்தான். ஒரு சின்ன யூ டர்ன் எடுத்து கரோனா பாதிப்பு மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

எண்ணிக்கை குறைவு என்றாலும், குறைந்து வந்த போக்கு மாறி, அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது என்பதுதான் நாம் கவனத்தில்  எடுத்துக்கொள்ள வேண்டிய விஷயமாகும். 

அதாவது, ஏப்ரல் 18ஆம் தேதி சென்னையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 99 ஆக இருந்த நிலையில், அது நேற்று 103 ஆகவும், இன்று 109 ஆகவும் அதிகரித்துள்ளது. தேனாம்பேட்டை, அடையாறு மண்டலங்களில்தான் இரட்டை இலக்கத்தில் பாதிப்பு இருந்தது. தற்போது இதில் கோடம்பாக்கமும் இணைந்துகொண்டது.

எனவே, மக்களே கரோனா ஓடிவிட்டது, ஒழிந்து விட்டது என்றோ நினைக்காமல், பொதுவிடங்களுக்குச் செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிந்துச் செல்லுங்கள். 

Story image

சென்னையை போலவே, தமிழகத்தில் மீண்டும் கரோனா அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

தமிழகத்தில் கடந்த வாரத்தில் நாள்தோறும் 25 பேருக்கு குறைவாகவே கரோனா உறுதி செய்யப்பட்டு நிலையில், இந்த வாரம் மீண்டும் 25 பேருக்கு மேல் கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 30 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

“தில்லி, மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் கரோனா அதிகரித்து வருகின்றன. ஆகையால், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கரோனா தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.

பொது இடங்களில், மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடங்களில் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். பரிசோதனை, தடுப்பூசி உள்ளிட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆட்சியர்கள் பின்பற்ற வேண்டும். மருத்துவமனைகளில் நோயாளிகள் அனுமதிக்கப்படுவதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.