தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

தமிழகம் போல் புதுச்சேரி இல்லை: எதில் தெரியுமா?

சென்னை உள்பட தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கரோனா பாதிப்பு மெல்ல அதிகரிக்கத்தொடங்கியருக்கும் நிலையில், புதுச்சேரி கரோனா இல்லாத யூனியன் பிரதேசமாகவே தொடர்ந்து நீடித்து வருகிறது.

News image
தமிழகம் போல் புதுச்சேரி இல்லை: எதில் தெரியுமா?
Updated On :22 ஏப்ரல் 2022, 12:57 pm

DIN

சென்னை உள்பட தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கரோனா பாதிப்பு மெல்ல அதிகரிக்கத்தொடங்கியருக்கும் நிலையில், புதுச்சேரி கரோனா இல்லாத யூனியன் பிரதேசமாகவே தொடர்ந்து நீடித்து வருகிறது.

புதுச்சேரியில் கரோனா நோயாளிகள் யாரும் இல்லாத நிலையில் புதிதாக யாருக்கும் தொற்று பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் கரோனா இல்லாத பகுதியாகவே தொடர்ந்து புதுச்சேரி உள்ளது. சுமார் 200 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் யாருக்கும் பாதிப்பு உறுதியாகவில்லை.

ஆனால், தமிழகத்தில் நேற்று மேலும் 39 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியிருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது.  தமிழகத்தில் ஏப்ரல்-20-ஆம் தேதி 31 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில் நேற்று மேலும் 39 பேருக்கு புதிதாக தொற்று உறுதியானது.

38 மாவட்டங்களில் 10 மாவட்டங்களில் மட்டுமே புதிதாக தொற்று பதிவாகியிருந்தது. அதுபோல சென்னையில் மட்டும் கரோனாவால் 21 பேர் பாதிக்கப்பட்டனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.