கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஆசிரியர்கள், இன்னொரு பெற்றோராக மாணவர்களை அரவணைக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

ஆசிரியர்கள், இன்னொரு பெற்றோராக மாணவர்களை அரவணைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 4:39 pm

DIN

ஆசிரியர்கள், இன்னொரு பெற்றோராக மாணவர்களை அரவணைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
சென்னை, கொளத்தூர், தனியார் பள்ளியில் நடைபெற்ற 30ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு முதல்வர் ஆற்றிய உரை, இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு, மீண்டும் பள்ளிக்கல்வித் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை இன்றைக்கு நாம் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். இன்னொன்றையும் நான் சொல்ல வேண்டும். அண்மையில் நிதிநிலை அறிக்கையில் தாக்கல் செய்தோம். எல்லா துறைகளுக்கும் நிதிகளை ஒதுக்கியிருக்கிறோம். இந்த நிதி ஆண்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டும் 36 ஆயிரத்து 895 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருக்கிறோம். கரோனா கால பொது முடக்கம், கட்டுப்பாடு இவையெல்லாம் ஏற்பட்டது. 
அதனால், கற்றல், இழப்பு ஏற்பட்டது. அதை சரிசெய்ய, ‘இல்லம் தேடிக் கல்வி’என்ற திட்டத்தை அறிவித்து, அதை வெற்றிகரமாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதை செயல்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் ஈடுபட்டு அதில் வெற்றி கண்டிருக்கக்கூடிய இந்தத் துறையினுடைய அமைச்சராக பொறுப்பேற்றிருக்கக்கூடிய அன்பில் மகேஷ் பொய்யா மொழியை நான் உங்கள் அனைவரின் சார்பில் வாழ்த்த, பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இதையும் படிக்க- கென்ய முன்னாள் அதிபர் மறைவு

அதேபோல், அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளை அமைக்கிறோம். இப்படி தொடர்ந்து புதிய திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். உங்கள் வளர்ச்சிக்கும், எதிர்காலத்திற்கும் அடித்தளம் அமைக்கப்போவது இந்தப் பள்ளிப் பருவம் தான். நீங்கள் என்னவாக ஆகப் போகிறீர்கள் என்பதைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிப்பதும் இந்தப் பள்ளிப் பருவம் தான். அதனால் தான், இதில் நான் மிக மிக அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்படுகிறேன். போட்டி மிகுந்த இந்த உலகத்தில் நீங்கள் அதற்கேற்ப உங்களைத் தகுதிக்குரியவர்களாக உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
நான் முதல்வன் என்ற புதுமையான வழிகாட்டித் திட்டத்தையும் நான் தொடங்கி வைத்திருக்கிறேன். பள்ளிப் பருவம் என்பது புத்தகங்களோடு அடங்கிவிடாமல் எல்லா திசைகளிலும் இருக்கக்கூடிய கற்கக்கூடிய பருவமாக அமைய வேண்டும். எந்த வித அழுத்தங்களும் இல்லாமல் மகிழ்ச்சிக்குரிய காலகட்டமாக அமையட்டும். கற்றல் என்பதே மகிழ்ச்சியோடு ஈடுபடக்கூடிய ஒரு செயல்பாடாக மாறட்டும். 
அதற்கு நம்முடைய ஆசிரியப் பெருமக்கள் உதவி செய்யவேண்டும். பள்ளிகள் என்பது, திறந்த மனதுடன் வரும் குழந்தைகளுக்கு, அறிவை ஊட்டி, அறிவியல் பூர்வமான சிந்தனைத் திறனை வளர்த்து, இந்தச் சமூகத்தின் பொறுப்புமிக்க மனிதர்களாக உருவாக்கக்கூடிய இல்லங்கள் தான் இந்தப் பள்ளிகள். இந்த இல்லங்களில் இருக்கக்கூடிய ஆசிரியர்கள், இன்னொரு பெற்றோராக மாணவர்களை அரவணைத்து வழிநடத்த வேண்டும்! இவ்வாறு அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.