
சேலத்தில் கனமழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் ஆங்காங்கே கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், சேலத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பழைய பேருந்து நிலையம்,, ஐந்து ரோடு, அஸ்தம்பட்டி, அயோத்தியாபட்டணம், , கொண்டலாம்பட்டி, ஏற்காடு அடிவாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்தது.
சின்னேரி வயக்காடு தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் புகுந்த தண்ணீர்.
கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிகுள்ளாகினர்.
மேலும் சுமார் ஒரு மணி நேரம் பெய்த கனமழையின் காரணமாக, சேலம் சின்னேரி வயக்காடு தாழ்வான பகுதிகளில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் இரவு நேரத்தில் சேலத்தில் பெய்த கன மழையின் காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவியது.
இதையும் படிக்க | எடப்பாடி அருகே பலத்த சூறைக்காற்றால் வாழை, தென்னை பயிர்கள் சேதம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.