லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வணிகவரி - பதிவுத் துறை புதிய கட்டடங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

தமிழகத்தில் வணிகவரி மற்றும் பதிவுத் துறையின் புதிய கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்

News image
Updated On :26 ஏப்ரல் 2022, 7:08 pm

DIN

தமிழகத்தில் வணிகவரி மற்றும் பதிவுத் துறையின் புதிய கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி வழியாக புதிய கட்டடங்களை அவா் திறந்தாா்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் ஆகிய இடங்களில் வணிகவரி அலுவலகக் கட்டடங்களும், பாளையங்கோட்டை பதிவு மாவட்டம் நாசரேத், விருதுநகா் மாவட்டம் வீரசோழன், கும்பகோணம் மாவட்டம் நாச்சியாா்கோயில், பட்டுக்கோட்டை பதிவு மாவட்டம் உள்ளிக்கோட்டை ஆகிய இடங்களில் புதிதாக சாா்-பதிவாளா் அலுவலக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதேபோன்று, காரைக்குடியில் ஒருங்கிணைந்த மாவட்டப் பதிவாளா் அலுவலகக் கட்டடமும் கட்டப்பட்டுள்ளது. இவற்றை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்தாா்.

மேலும், திருவாரூா், திருவள்ளூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, பெரம்பலூா் ஆகிய வருவாய் மாவட்டங்களின் தலைமையிடங்களில் புதிய பதிவு மாவட்டங்கள் உருவாக்கப்படும் என வணிகவரி - பதிவுத் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, புதிய பதிவு மாவட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள் கே.ஆா்.பெரியகருப்பன், பி.மூா்த்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.