தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

அனைத்து ஊராட்சிகளிலும் மே 1-ல் கிராம சபைக் கூட்டம்

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மே 1ஆம் தேதி காலை 10 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

Published On :

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மே 1ஆம் தேதி காலை 10 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

இதில், வரவு, செலவு கணக்குகள் பல்வேறு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு குறித்து விவாதிக்கப்படவுள்ளது. 

தமிழகத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும், தொழிலாளர் தினமான மே 1ஆம் தேதியன்று கிராம சபை கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், சுகாதாரம் (பள்ளி கழிப்பறைகள் மற்றும் அங்கன்வாடி) போன்றவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. 

கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், முதல்வரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம், பிரதமர் குடியிருப்பு திட்டம் (ஊரகம்) குறித்த விளக்க உரையும் பொதுமக்கள் மத்தியில் விவாதிக்கப்பட உள்ளது. கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.