லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கைத்தறித் துறை சார்பில் ரூ.6.96 கோடி செலவில் புதிய கட்டடங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்

கைத்தறித் துறை சார்பில் ரூ.6.96 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.  

News image
Updated On :29 ஏப்ரல் 2022, 10:28 am

DIN

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறையின் கீழ் செயல்படும் கைத்தறித் துறை சார்பில் தஞ்சாவூர், கரூர், விருதுநகர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 6 கோடியே 96 இலட்சத்து 31 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நெசவுக்கூடம், காட்சியறையுடன் கூடிய கிடங்கு, பொதுவசதி மையக் கட்டடம், கழிவுநீர் சுத்திகரிப்பு வசதியுடன் கூடிய சாயச்சாலைக் கட்டடங்கள் ஆகிய கட்டடங்களை திறந்து வைத்தார்.
நாட்டின் மரபு மற்றும் பண்பாடு ஆகியவற்றைப் பாதுகாப்பதிலும், பொருளாதார வளர்ச்சியிலும் கைத்தறித் தொழில் பெருமை வாய்ந்த பங்கினை வகிக்கிறது.
நம்முடைய கைவினைச் சிறப்பை வெளிப்படுத்தும் நீண்ட பாரம்பரிய கலையாக நெசவுத்தொழில் விளங்கி வருகிறது. கைத்தறி, விசைத்தறி மற்றும் துணிநூல் பிரிவுகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காகவும், அனைத்துப் பிரிவுகளின் நலனுக்காகவும் குறிப்பாக நெசவாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் நலனுக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், கைத்தறி ஆதரவுத் திட்டத்தின் கீழ், நெசவாளர்கள் பயன்பெறும் வகையில் ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் காளிகாவலசு தொழிலியல் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் 200 கைத்தறிகள் மற்றும் பிற வசதிகளுடன் 3 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நெசவுக்கூடம் மற்றும் சென்னிமலை தொழிலியல் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் 1 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காட்சியறையுடன் கூடிய புதிய கிடங்கு திருச்சி மாபெரும் கைத்தறி குழுமத் திட்டத்தின் கீழ், தஞ்சாவூர் மாவட்டம், திருபுவனத்தில் கைத்தறி, உபகரணங்கள் மற்றும் நெசவு தொடர்பான பிற பணிகளை மேற்கொள்ளும் வகையில் 58 இலட்சத்து 61 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள திருவிடைமருதூர் பொது வசதி மையக் கட்டடம் மற்றும் கரூர் மாவட்டத்தில் 74 இலட்சத்து 11 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாவட்ட அளவிலான கழிவுநீர் சுத்திகரிப்பு வசதியுடன் கூடிய சாயச்சாலைக் கட்டடம், விருதுநகர் மாபெரும் கைத்தறி குழுமத் திட்டத்தின் கீழ், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை மற்றும் இராமச்சந்திராபுரம் பகுதிகளில் 1 கோடியே 43 இலட்சத்து 59 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாவட்ட அளவிலான கழிவுநீர் சுத்திகரிப்பு வசதியுடன் கூடிய சாயச்சாலைக் கட்டடங்கள் என மொத்தம் 6 கோடியே 96 இலட்சத்து 31 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கைத்தறித் துறை கட்டடங்களை முதல்வர் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், கைத்தறித் துறை ஆணையர் த.பொ. ராஜேஷ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து
கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.