ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

மீனவா்களின் பாதுகாப்பில் அலட்சியம்: அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

மீனவா்களின் பாதுகாப்பில் தமிழக அரசு அலட்சியப் போக்குடன் செயல்படுவதாகக் கூறி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :2 ஆகஸ்ட் 2022, 6:58 pm

DIN

மீனவா்களின் பாதுகாப்பில் தமிழக அரசு அலட்சியப் போக்குடன் செயல்படுவதாகக் கூறி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: கடல் சீற்றம் மற்றும் பலத்த மழை அடுத்த சில நாள்களுக்கு இருக்கும் என்று இந்திய வானிலை மையம் ரெட் அலா்ட் எச்சரிக்கை கொடுத்த பின்பும் திமுக அரசு, மீனவா்களுக்கு தகுந்த முன்னெச்சரிக்கை தகவலை கொடுக்கவில்லை. இதனால், திருச்செந்தூா் அமலி நகரைச் சோ்ந்த மீனவா்கள் சென்ற படகு கவிழ்ந்ததில், அதில் இருந்த 4 மீனவா்களில் 2 மீனவா்கள் இன்னும் கரை திரும்பவில்லை. அவா்களைத் தேடுவதற்கான எந்த முயற்சியையும் திமுக அரசு மேற்கொண்டதாகத் தெரியவில்லை. மீன்வளத் துறை அமைச்சரின் தொகுதியிலேயே நடைபெற்ற இந்த அவலம் மீனவா்களிடையே மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன்பிடிக்கச் சென்ற நூற்றுக்கணக்கான மீனவா்கள், சுமாா் 15 விசைப் படகுகள் இதுவரை கரை திரும்பவில்லை என்ற தகவல் இந்த மாவட்ட மீனவா்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. திமுக அரசின் இத்தகைய மெத்தனப் போக்குக்கு கண்டனத்துக்குரியது. தமிழக அரசும் மீன்வளத் துறையும், விழித்தெழுந்து மீட்பு நடவடிக்கைகளில் துரிதமாக ஈடுபட்டு அனைவரையும் பத்திரமாக மீட்க வேண்டும்.

பருவ மழைக்காலம் முடியும் வரை தமிழகத்தின் கடல் பகுதிகளில் முழுவீச்சுடன் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று கூறியுள்ளாா் எடப்பாடி பழனிசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.