இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ராணிப்பேட்டை சாலை விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு நிவாரண நிதி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.

News image
ராணிப்பேட்டை சாலை விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு நிவாரண நிதி
Updated On :2 ஆகஸ்ட் 2022, 9:15 am

DIN

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், நேற்று (1.8.2022) மாலை 5 மணியளவில், சோளிங்கர் – அரக்கோணம் சாலை, எஸ்ஆர் கண்டிகை மின்னலம்மாள் கோவில் எதிரே சாலையோரம் நின்றிருந்த புதூர் கண்டிகையைச் சேர்ந்த சீனிவாசன் (வயது 45) மற்றும் அங்கு சாலையில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த எஸ்ஆர் கண்டிகை கிராமத்தை சேர்ந்த உண்ணாமலை (வயது 45), கன்னியப்பன் (வயது 65) ஆகியோர் மீது அவ்வழியாக சென்ற கார் எதிர்பாராத விதமாக மோதியதில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த விபத்தில் உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கும் தலா ரூபாய் இரண்டு இலட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.