சென்னையில் வியாழக்கிழமை 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ.184 உயா்ந்து, ரூ.38,600-க்கு விற்பனையாகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.144 குறைந்து ரூ.38,416-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.18 குறைந்து ரூ.4802-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதையும் படிக்க | இந்தியாவில் 75,000 புத்தாக்க நிறுவனங்கள்: பியூஷ் கோயல் பெருமிதம்
இந்நிலையில், வியாழக்கிழமை 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ.184 உயா்ந்து, ரூ.38,600-க்கு விற்பனையாகிறது.
அதேபோன்று கிராமுக்கு ரூ.23 உயா்ந்து ரூ.4,825- ஆக விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.20 காசுகள் அதிகரித்து, ரூ. 63.20-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.63 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.