ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் சிறைப்பிடிப்பு! வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு - காங்கிரஸ்மூலனூர் வஞ்சியம்மன் கோயிலில் முதல்வர் விஜய் இன்று சாமி தரிசனம்?இந்திய விமானி ஸ்மித் மச்சாருடன் இஸ்ரேல் பிரதமர் உரையாடல்! உலக நாயகன் என புகழாரம்!தாராபுரம் பிரசாரம்: உதயநிதி மீது வழக்குப் பதிவு!தமிழ்நாட்டின் கடலோரத்தில் ஒரே நாளில் 500 மி.மீ. மழைப்பொழிவு ஏற்படலாம்! மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு! கோவை, நீலகிரி, தேனியில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு

சீர்காழியில் இரு மாநில அரசு பேருந்துகள் மோதி விபத்து: அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் பயணிகள் உயிர்தப்பினர்

சீர்காழி புறவழிச்சாலையில் புதுச்சேரி அரசு பேருந்தும், தமிழக அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாதில் 18க்கும் மேற்பட்ட பயணிகள் காயங்களுடன் உயிர்தப்பினர்.

சீர்காழி புறவழிச்சாலையில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான புதுச்சேரி அரசு பேருந்தும், தமிழக அரசு பேருந்தும்.

Published On :

சீர்காழி புறவழிச்சாலையில் புதுச்சேரி அரசு பேருந்தும், தமிழக அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாதில் 18க்கும் மேற்பட்ட பயணிகள் காயங்களுடன் உயிர்தப்பினர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் இருந்து சிதம்பரம் செல்லும் புறவழிச் சாலையில் கோவில்பத்து அருகே புதுச்சேரியில் இருந்து காரைக்கால் நோக்கிச் சென்ற புதுச்சேரி அரசு பேருந்தும் பொறையாரில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த தமிழ்நாடு அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. 

Story image

சேதமடைந்துள்ள புதுச்சேரி அரசு பேருந்தின் முன்பகுதி.

நான்கு வழிச் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வரும் நிலையில், அதற்காக பாலம் கட்டப்பட்டு வருகிறது. இவ்விடத்தில் சாலை குறுகியதாக உள்ளதால் இரண்டு பேருந்துகளும் ஒரே நேரத்தில் கடக்க முற்பட்டபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

Story image

சீர்காழி புறவழிச் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விபத்தில் இரண்டு அரசு பேருந்துகளிலும் பயணித்த 18-க்கும் மேற்பட்ட பயணிகள் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபினர். காயம் அடைந்த அனைவரையும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.  

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சீர்காழி போலீசார் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்விபத்தால் சீர்காழி புறவழிச் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.