தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்
தமிழகத்தில் பல்வேறு துறைகளின் செயலாளர்கள் மற்றும் இயக்குநர்கள் என 6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


தமிழகத்தில் பல்வேறு துறைகளின் செயலாளர்கள் மற்றும் இயக்குநர்கள் என 6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் முதுன்மைச் செயலாளராக டி.எஸ். ஜவஹர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநராக மதுமதி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பொதுப் பணித்துறை முதன்மை செயலாளராக மணிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை தலைமைச் செயலாளராக மங்கத்ராம் ஷர்மா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஆதி திராவிடர் நலத்துறை இயக்குநராக ஆனந்த் நியிமக்கப்பட்டுள்ளார்.
கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத்துறை செயலாளராக ஏ.கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்கண்ட 6 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...