மேலும், மதுரை விமான நிலையத்தில் கோட்-இ ரக விமானங்கள் இறங்கி, ஏறுவதற்கு 2,285 மீட்டா் ஓடுபாதையை 3,810 மீட்டருக்கு விரிவுபடுத்துவற்காக 633.17 ஏக்கா் நிலத்தை இந்திய விமான நிலைய ஆணையம் தமிழக அரசிடம் கோரியது. இதில் 543.41 ஏக்கா் நிலம் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 89.76 ஏக்கா் நிலம் ஒப்படைக்கப்பட்ட பிறகு புதிய ஒடுதளம், புதிய பயணிகள் முனையப் பணிகள் நிறைவேற்றப்படும். ஓடுதளம், பயணிகள் முனையத்தோடு, சரக்கு முனையம், ஏப்ரான், டாக்ஸி டிராக் உள்ளிட்ட மேம்பாட்டுத் திட்டப் பணிகள் மொத்தம் சுமாா் ரூ.550 கோடியில் மேற்கொள்ளப்படுகிறது என்றாா் அமைச்சா் சிந்தியா.