12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

முத்தம் கொடுக்காத மூதாட்டியை இரும்புக் கம்பியால் தாக்கிய வாலிபர்! ஓமலூரில் பரபரப்பு

ஓமலூர் அருகே முத்தம் கேட்டு கொடுக்காத மூதாட்டியை இரும்புக் கம்பியால் வாலிபர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மாதையன்

Published On :

ஓமலூர் அருகே முத்தம் கேட்டு கொடுக்காத மூதாட்டியை இரும்புக் கம்பியால் வாலிபர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள மோரூர் பகுதியைச் சேர்ந்தவர் மாதையன். கூலித் தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் மதுபோதையில் இருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த சாந்தா என்ற மூதாட்டியிடம் முத்தம் கேட்டுள்ளார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி, அவரிடம் சண்டை போட்டுள்ளார். ஆனால், கேட்டது கிடைக்காத விரக்தியில் மதுபோதையில் இருந்த மாதையன் அருகில் இருந்த இரும்புக் கம்பியை எடுத்து மூதாட்டியை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதனால் கூச்சலிட்ட மூதாட்டியைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை மீட்டனர்.  தொடர்ந்து பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள தீவட்டிப்பட்டி காவல்துறையினர் மாதையனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

தான் முழு போதையில் இருந்ததால் தவறாக நடந்து கொண்டதாகவும் தன்னை மன்னித்து விடுமாறும் மாதையன் கேட்டுள்ளார்.

ஆனால், மாதையன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மூதாட்டியிடம் முத்தம் கேட்ட சம்பவத்தில் வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.