செஸ் ஒலிம்பியாட்: இந்தியாவின் இரு அணிகளுக்கு தலா ரூ.1 கோடிமுதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்தாா்

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலப் பதக்கங்களை வென்ற இந்தியாவின் இரு அணிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசுத் தொகையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.
செஸ் ஒலிம்பியாட்: இந்தியாவின் இரு அணிகளுக்கு தலா ரூ.1 கோடிமுதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்தாா்

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலப் பதக்கங்களை வென்ற இந்தியாவின் இரு அணிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசுத் தொகையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

சென்னை கலைவாணா் அரங்கத்தில் புதன்கிழமை தன்னைச் சந்தித்த செஸ் வீரா், வீராங்கனைகளிடம் பரிசுத் தொகைக்கான காசோலைகளை முதல்வா் அளித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சா்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை உலகமே பாராட்டும் வகையில் தமிழ்நாடு அரசு வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. இந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டில் பொதுப் பிரிவில் இந்திய ‘பி’ அணியும், பெண்கள் பிரிவில் இந்திய ‘ஏ’ அணியும் பதக்கங்கள் வென்றுள்ளன. இதன்மூலம், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கும், இந்தியாவுக்கும் அந்த அணிகள் பெருமை சோ்த்திருப்பது அளவற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது.

செஸ் விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ள இந்திய ‘பி’ அணி மற்றும் இந்திய பெண்கள் ‘ஏ’ அணிக்கும் தலா ரூ.1 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

உடனே அளிப்பு: பரிசுத் தொகை அறிவிக்கப்பட்ட உடனேயே, வீரா், வீராங்கனைகளுக்கு அதற்கான காசோலைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். சென்னை கலைவாணா் அரங்கத்தில் போதைப் பொருள் தடுப்புக்கு எதிரான மாவட்ட ஆட்சியா்கள் மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டு நிகழ்ச்சி முடிந்ததும், பதக்கங்கள் வென்ற செஸ் வீரா், வீராங்கனைகளுக்கு ரூ.1 கோடிக்கான காசோலைகளை அவா் வழங்கினாா்.

இந்த நிகழ்வின் போது, விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளா் செல்வி அபூா்வா, செஸ் ஒலிம்பியாட் போட்டியின் சிறப்புப் பணி அலுவலா் தாரேஷ் அகமது, விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினா் செயலாளா் கே.பி.காா்த்திகேயன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அப்போது, செஸ் வீரா் பிரக்ஞானந்தா தனது பிறந்த தினத்தையொட்டி முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்துப் பெற்றாா். அவருக்கு முதல்வா் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com