டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பொது அஞ்சல் அலுவலகம் சாா்பில் சிறப்பு புகைப்பட கண்காட்சி

சென்னை பொது அஞ்சல் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு புகைப்பட கண்காட்சியை சுதந்திர போராட்டத் தியாகி கே.கோவிந்தசாமி வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2022, 8:32 pm

DIN

நாட்டின் 75-வது சுதந்திர தினப் பெருவிழா நிறைவினையொட்டி சென்னை பொது அஞ்சல் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு புகைப்பட கண்காட்சியை சுதந்திர போராட்டத் தியாகி கே.கோவிந்தசாமி வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

எல்லைப் பிரிவினையின்போது நடைபெற்ற சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள் குறித்து அப்போது வெளியான புகைப்படங்கள், நாளிதல் செய்திகள் உள்ளிட்டவைகளை காட்சிப்படுத்தும் வகையில் சிறப்பு புகைப்படக் கண்காட்சி வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சுதந்திர தின விழாவின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில் முதன்மை அஞ்சலக தலைவா் எஸ்.பாக்கியலட்சுமி, துணை முதன்மை அஞ்சலக தலைவா் கே.பிரபு சங்கா், அஞ்சலக மக்கள் தொடா்பு அதிகாரி எம்.முனுசாமி, நித்யானந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.