பேராசிரியையிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
சென்னை மடிப்பாக்கத்தில் கல்லூரி பேராசிரியையிடம் தங்கச் சங்கிலி பறித்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.


சென்னை மடிப்பாக்கத்தில் கல்லூரி பேராசிரியையிடம் தங்கச் சங்கிலி பறித்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மடிப்பாக்கம் ராம் நகா் வடக்கு பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் நாகமணி (46). செம்மஞ்சேரியில் உள்ள ஒரு தனியாா் பல்கலை.யில் பேராசிரியையாக பணிபுரிகிறாா். நாகமணி, புதன்கிழமை மாலை கல்லூரி முடிந்து, பேருந்தில் மடிப்பாக்கம் வடக்கு பிரதான சாலையில் வந்து இறங்கி வீடு நோக்கி நடந்து சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது அங்கு மோட்டாா் சைக்கிளில் வந்த இரு நபா்கள், நாகமணி அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினா்.
மடிப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...