தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பண்ருட்டி அருகே நியாய விலைக் கடை விற்பனையாளர் கொலை

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே நியாய விலைக்கடை விற்பனையாளர் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2022, 6:12 am

DIN

நெய்வேலி: கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே நியாய விலைக்கடை விற்பனையாளர் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பண்ருட்டி அடுத்துள்ள மாளிகை மேடு புது காலனியில் வசித்து வந்தவர் சப்தரிஷி மகன் திலீப்குமார் (56), பள்ளம் கிராமத்தில் உள்ள நியாய விலைக் கடையில் விற்பனையாளராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி அஞ்சலைதேவி(53), மகன் வினோத்(30), மகள்கள் ராதிகா(28), வினோதினி (25) உள்ளனர்.

வெள்ளிக்கிழமை மாலை 7 மணி முதல் திலீப்குமார் காணவில்லை. இதுகுறித்து உறவினர்கள் பண்ருட்டி காவல் நிலையத்தில் சனிக்கிழமை காலை புகார் அளித்தனர்.

இந்நிலையில், சுந்தர்ராஜன் கரும்புத் தோட்டத்தில் கழுத்து அறுபட்ட நிலையில், உடலில் காயத்துடன் இறந்து கிடந்தார். 

சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் திலீப்குமார் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து பண்ருட்டி டிஎஸ்பி சபியுல்லா மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.