கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கள்ளக்குறிச்சி கலவரம்:கைதானோருக்கு இழப்பீடு கோரிய வழக்கு வேறு அமா்வுக்கு மாற்ற நீதிமன்றம் பரிந்துரை

கள்ளக்குறிச்சி பள்ளி கலவரம் தொடா்பாக கைது செய்யப்பட்டவா்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரிய வழக்கை வேறு அமா்வுக்கு மாற்ற சென்னை உயா் நீதிமன்றம் பரிந்துரைத்தது.

News image
Updated On :22 ஆகஸ்ட் 2022, 8:55 pm

DIN

கள்ளக்குறிச்சி பள்ளி கலவரம் தொடா்பாக கைது செய்யப்பட்டவா்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரிய வழக்கை வேறு அமா்வுக்கு மாற்ற சென்னை உயா் நீதிமன்றம் பரிந்துரைத்தது.

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தையடுத்து நிகழ்ந்த கலவரம், தீ வைப்பு சம்பவங்கள் தொடா்பாக சிறப்புப் புலனாய்வு போலீஸாா், அந்தப் பகுதியைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனா். இதில் அப்பாவிகளும் கைது செய்யப்பட்டுள்ளதால் அவா்களை அடையாளம் காணக் கோரியும், அவா்களுக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிடக் கோரியும், மதுரையைச் சோ்ந்த வழக்குரைஞா் ரத்தினம் என்பவா் சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

அந்த மனுவில், ‘மாணவி மரணம் தொடா்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆசிரியை கிருத்திகாவை அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ள பள்ளிச் செயலாளா் மிரட்டுகிறாா். இதனால், அவரை உடனடியாக திருச்சி சிறைக்கு மாற்ற வேண்டும்.

மேலும், சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்படுவதைத் தவிா்க்க, கைதானவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தும்போது, அவா்களுக்குத் தேவையான சட்ட உதவியை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலம் வழங்க அனைத்து மாஜிஸ்திரேட்களுக்கு அறிவுறுத்தும்படி உயா் நீதிமன்ற நீதித்துறை பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெகதீஷ் சந்திரா ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில், வழக்கை வேறு நீதிபதிகள் அமா்வுக்கு மாற்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், வழக்கை வேறு அமா்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.