நீட் ஆள்மாறாட்டம்! நீதிமன்றத்தில் சிபிஐ அளித்த பரிந்துரைகள்
நீட் தேர்வு மையத்தில் ஒவ்வொரு பதிவரையும் விடியோ பதிவு செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் சிபிஐ தரப்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


நீட் தேர்வு மையத்தில் ஒவ்வொரு பதிவரையும் விடியோ பதிவு செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் சிபிஐ தரப்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் இடைத்தரகராக செயல்பட்ட கேரளத்தைச் சேர்ந்த ரஷித் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இது தொடர்பாக வழக்கு நீதிபதி நிர்மல் குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீட் தேர்வில் ஆள்மாறாட்ட முறைகேடுகளைத் தடுக்க சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என சிபிஐ பரிந்துரைத்தது.
தேர்வரின் புகைப்படம் அனுமதி சீட்டில் உள்ள படத்துடன் சரியாக பொருந்துகிறதா என கண்காணிப்பாளர் பார்க்க வேண்டும் என்றும்,
முகத்தைக் கண்டறியும் கருவி (ஃபேஸ் டிடெக்டர்) போன்ற மென்பொருள்களைப் பயன்படுத்தி நீட் தேர்வில் முறைகேடுகள் நடக்காமல் தடுக்கலாம் எனவும் சிபிஐ பரிந்துரை செய்தது.
சிபிஐ அளித்த பரிந்துரைகளைக் கேட்ட நீதிபதி நிர்மல் குமார், வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...