மதுரையில் கடையடைப்புப் போராட்டம்! 60% கடைகள் மூடல்

மதுரை மாட்டுத்தாவணி காய்கறிக் கடைகளின் வாடகை உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 60 சதவீத கடைகள் இன்று மூடப்பட்டுள்ளன. 
மதுரையில் மூடப்பட்டிருந்த கடைகள்
மதுரையில் மூடப்பட்டிருந்த கடைகள்

மதுரை மாட்டுத்தாவணி காய்கறிக் கடைகளின் வாடகை உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 60 சதவீத கடைகள் இன்று மூடப்பட்டுள்ளன. 

மதுரை மாநகராட்சி சார்பில் மாட்டுத்தாவணியில் ஒருங்கிணைந்த காய்கறிகள் மற்றும் பழங்கள் சந்தை இயங்கி வருகிறது. இச்சந்தையில் உள்ள 1,836 கடைகளில் வியாபாரிகள், தொழிலாளர்கள் என 10,000-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இந்த சந்தைக்கு ஆந்திரம், கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு 1,000 டன் காய்கறிகள் விற்பனைக்காக வருகிறது. 

தற்போது மதுரை மாநகராட்சி இக்கடைகளின் வாடகையினை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சங்கங்கள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒருபகுதியாக 4 சங்கங்களின் சார்பில் இன்று கடையடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது. கடைகளின் வாடகை உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 60 சதவிகித கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

அதேநேரத்தில் 40 சதவீத வியாபாரிகள், கடைகளைத் திறந்து வியாபாரம் செய்து வருகின்றனர். சில்லறை வணிகம், பழங்கள் விற்பனை கடைகள் வழக்கம் போல இயங்குகின்றன. அவர்களும் வாடகை உயர்வு, ஜிஎஸ்டி வரி என பல பிரச்னைகள் இருந்தாலும் மாநகராட்சி நிர்வாகம் தங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் என்ற நம்பிக்கையில் கடையை திறந்திருப்பதாகத் தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com