டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

வேலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

வேலூர் மாவட்டத்தில் இன்று பிற்பகல் மற்றும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

News image
கோப்புப் படம்.
Updated On :8 டிசம்பர் 2022, 7:05 am

DIN

வேலூர் மாவட்டத்தில் இன்று பிற்பகல் மற்றும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வு படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. அது நேற்று இரவு 11.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றுள்ளது. 

இந்நிலையில் மாண்டஸ் புயல் நகரும் வேகமானது மணிக்கு 6 கி.மீட்டராக குறைந்துள்ளது.  தற்போது காரைக்காலுக்கு கிழக்கு - தென் கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு 620 கி.மீ. தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது.

இந்நிலையில், 9-ம் தேதி நள்ளிரவு மாண்டஸ் புயல் கரையைக் கடக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று பிற்பகல் மற்றும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.