தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கிருஷ்ணகிரி அருகே, பள்ளி வாகனம் மீது கார் மோதியதில் முதியவர் பலி

கிருஷ்ணகிரி அருகே, பள்ளி வாகனம் மீது கார் மோதியதில் காரில் இருந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

News image
தனியார் பள்ளி பேருந்தின் பின்பகுதியில் வேகமாக மோதிய கார்
Updated On :9 டிசம்பர் 2022, 4:14 am

DIN


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, பள்ளி வாகனம் மீது கார் மோதியதில் காரில் இருந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

சேலம், அஸ்தம்பட்டியைச் சேர்ந்தவர் ஜெபராஜ் ஐசக் (60). இவர்,  ஒரு காரில் கிருஷ்ணகிரி நோக்கி இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தார். 

கார், கிருஷ்ணகிரி மாவட்டம்,  சேலம் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் காவேரிப்பட்டிணத்தை அடுத்த எர்ரஅள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த தனியார் பள்ளி பேருந்தின் பின்பகுதியில் வேகமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஜெபராஜ் ஐசக் நிகழ்வடத்திலேயே இறந்தார். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலத்தை உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். 

விபத்து குறித்து காவேரிப்பட்டிணம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.