அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ஆத்தூர் அருகே விவசாயி வீட்டில் ரூ. 1 கோடி கொள்ளை: போலீசார் தீவிர விசாரணை!

சேலம் ஆத்தூர் அருகே விவசாயி வீட்டில் சாக்கு மூட்டையில் கட்டி வைக்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :10 டிசம்பர் 2022, 7:46 am

DIN

சேலம் ஆத்தூர் அருகே விவசாயி வீட்டில் சாக்கு மூட்டையில் கட்டி வைக்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தலைவாசல் சார்வாய் புதூர் கிராமத்தில் சாமியார் கிணறு என்ற பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி லோகநாதன். இவர் தனது மனைவி மற்றும் தாயுடன் விவசாய தோட்டத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.

கடந்த 7 ஆம் தேதி இரவு அப்பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலுக்குச் சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தபோது அவரது வீட்டில் முன்பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

மேலும் வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, சாக்கு மூட்டையில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி ரூபாய் பணம் கொள்ளை போனது தெரிய வந்தது.

இதனையடுத்து லோகநாதன் தலைவாசல் போலீசில் அளித்த புகாரின்பேரில் ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது தனது வீட்டில் இருந்த 48,000 ரூபாய் பணம் மற்றும் கால் பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றதாக முதலில் கூறியுள்ளார்.

பின்னர் சிறிது நேரத்தில், தனது நண்பர் கோபாலகிருஷ்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டு பைகளில் இரண்டு கோடி ருபாய் பணத்தை கொண்டு வந்து பாதுகாப்பாக வைக்கும்படி கூறியதாகவும் அதில் ஒரு கோடியை பீரோவிலும் இன்னொரு கோடியை  நெல் மூட்டைகளுக்கு இடையே வைத்ததாகவும் அதில் பீரோவில் இருந்த ஒரு கோடி ரூபாய் பணம் மட்டும் கொள்ளை போனதாகதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் தடையறிவியல் நிபுணர்களை வரவழைத்து வீட்டில் தடயங்களை சேகரித்து, பின்னர் அவரது நண்பரையும் வரவழைத்து விசாரணை செய்து வருகின்றனர். 

அப்போது இருவரும் முறையாக பதில் அளிக்காததால், டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் சந்தேகத்தின்பேரில் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 

கொள்ளை தொடர்பாக லோகநாதன் இதுவரை போலீசில் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கவில்லை என்பதால் அவரிடமும் விசாரணை தொடர்கிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.