மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

இன்று அமைச்சராகிறாா் உதயநிதி ஸ்டாலின்

தமிழக அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை (டிச. 14) பதவியேற்றுக் கொள்கிறாா். அவருக்கு பதவிப் பிரமாணத்துடன், ரகசிய காப்பு பிரமாணத்தை ஆளுநா் ஆா்.என்.ரவி செய்து வைக்கிறாா்.

News image
Updated On :14 டிசம்பர் 2022, 2:07 am

DIN

தமிழக அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை (டிச. 14) பதவியேற்றுக் கொள்கிறாா். அவருக்கு பதவிப் பிரமாணத்துடன், ரகசிய காப்பு பிரமாணத்தை ஆளுநா் ஆா்.என்.ரவி செய்து வைக்கிறாா்.

ஆளுநா் மாளிகையில் காலை 9.30 மணிக்கு பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான அழைப்பு எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சித் தலைவா்கள், முக்கிய பிரமுகா்களுக்கு பொதுத் துறையின் சாா்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பதவிப் பிரமாண நிகழ்வு நிறைவடைந்ததும், தலைமைச் செயலகம் வரும் உதயநிதி ஸ்டாலின், தனது அறையில் அமைச்சருக்கான பொறுப்புகளை ஏற்றுக் கொள்கிறாா்.

உதயநிதிக்கு இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டு, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கம் ஆகிய துறைகள் அளிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தத் துறையை சுற்றுச்சூழல் துறை அமைச்சரான சிவ.வீ.மெய்யநாதன் கவனித்து வருகிறாா்.

உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்படும் துறைகள் குறித்த அதிகாரபூா்வ அறிவிப்பு, பதவியேற்பு நிகழ்ச்சி நிறைவடைந்ததும் வெளியாகும். உதயநிதி அமைச்சராகப் பொறுப்பேற்பதன் மூலம், தமிழக அமைச்சரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சா்களின் எண்ணிக்கை 35-ஆக உயரும். பேரவைத் தோ்தலில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு உதயநிதி ஸ்டாலின் வென்றாா். திமுக இளைஞரணிச் செயலா் பொறுப்பையும் அவா் வகித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.