
திருவண்ணாமலை மாவட்டம் ஒரந்தவாடி கிராமத்தில் மனைவி, 5 குழந்தைகளை வெட்டிக் கொலை செய்துவிட்டு தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடும்பத் தகராறில் மனைவி, குழந்தைகளை வெட்டிக் கொலை செய்துவிட்டு பழனி என்பவர் தற்கொலை செய்துகொண்டார்.
இதையும் படிக்க: அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது!
மனைவி வள்ளி, மகள்கள் த்ரிஷா (15), மோனிகா (14), சிவசக்தி (6), மகன் தனுஷ் (4) கொலை செய்துவிட்டு பழனி தற்கொலை செய்து கொண்டார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 9 வயது பூமிகா, அரசு மருவத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த காவல் துறையினர் 5 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.