டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கிறிஸ்துமஸ், பொங்கல்: சிறப்பு கேக் வகைகளை அறிமுகம் செய்த ஆவின்!

கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆவின் நிறுவனம் சிறப்பு கேக் வகைகளை அறிமுகம் செய்கிறது. 

News image
Updated On :14 டிசம்பர் 2022, 12:14 pm

DIN

கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆவின் நிறுவனம் சிறப்பு கேக் வகைகளை அறிமுகம் செய்கிறது. 

பண்டிகை காலத்தில் ஆவின் நிறுவனம் பல சிறப்பு வகை இனிப்புகளை அறிமுகம் செய்து வருகிறது. 

Story image

இந்நிலையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் என தொடர்ச்சியாக பண்டிகைகள் வருவதையொட்டி, ஆவின் நிறுவனம் சிறப்பு கேக் வகைகளை அறிமுகம் செய்கிறது. 

Story image

பிளாக் பாரஸ்ட் கேக், சாக்கோ ட்ரிபில், ஸ்ட்ராபெரி கேக், பைனாப்பில் கேக், ஒயிட் ஃபாரஸ்ட் கேக், பட்டர்ஸ்காட்ச் கேக், ரெயின்போ கேக், பிளாக்கரண்ட் கேக், ரெட் வெல்வெட் கேக், டெத் பை சாக்லேட் கேக், பிளம் கேக் ஆகியவை ஆவின் பாலகங்களில் விற்பனை செய்யப்படும்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Story image

பால்வளத்துறை அமைச்சர் நாசர் இந்த கேக்குகளை இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்துவைத்தார். மேலும், இந்நிகழ்வில் மதுரவாயல் தொகுதி எம்.எல்.ஏ காரப்பாக்கம் கணபதி, பால்வளத்துறை ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குனர் மரு. சுப்பையன் இ,ஆ,ப.,, இணை மேலாண்மை இயக்குநர் சரயு இ,ஆ,ப., மற்றும் ஆவின் உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.