/

தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 அதிரடியாக உயர்வு!

சென்னையில் ஆபரணத் தங்கம் தொடர்ந்து 40 ஆயிரத்தைத் தாண்டி விற்பனையாகி வரும் நிலையில், இன்று சவரனுக்கு ரூ.680 உயர்ந்துள்ளது.

News image
Updated On :14 டிசம்பர் 2022, 6:48 am

DIN

சென்னையில் ஆபரணத் தங்கம் தொடர்ந்து 40 ஆயிரத்தைத் தாண்டி விற்பனையாகி வரும் நிலையில், இன்று சவரனுக்கு ரூ.680 உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. ஜூலையில், மத்திய அரசு தங்கத்துக்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. அதைத் தொடர்ந்து, தங்கம் விலையும் உயர்ந்தது. பின்னா், ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.

கடந்த டிசம்பர் 2-ம் தேதி தங்கம் விலை 40 ஆயிரத்தைத் தாண்டியது. அதன்படி, டிச.14-ம் தேதி காலை நிலவரப்படி ஒரு சவரன் ரூ.680 உயர்ந்து, ரூ.40,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் ஒன்றுக்கு ரூ.85 குறைந்து ரூ.5,100     ஆக விற்பனையாகிறது.

இதேபோல், வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிலோவுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.74,000-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து ரூ.74.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது

புதன்கிழமை நிலவரப்படி

தங்கம் கிராம் - ரூ.5,100

தங்கம் ஒரு சவரன் - ரூ.40,860

வெள்ளி கிராம் - 74.00

ஒரு கிலோ வெள்ளி - ரூ.74,000

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.