திண்டுக்கல்: பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கம்பிவட ஊர்தி (ரோப் கார்) சேவை திங்கள்கிழமை (டிச.19) ஒரு நாள் மட்டும் இயங்காது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உள்ளது. அறுபடை வீடுகளில் ஒன்றான இந்த கோயிலில் முருகப் பெருமான் ஆண்டி கோலத்தில் காட்சியளிக்கிறார்.
இதையும் படிக்க | ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: செரிமானம் விரைவில் ஏற்பட...?
இந்த கோயிலுக்கு பக்தர்கள் சிரமமின்றி சென்று வருவதற்காக கம்பிவட ஊர்தி (ரோப் கார்) சேவைகள் செய்யப்பட்டுள்ளன. அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் ரோப் கார் சேவை ராக்கால பூஜை வரை தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. மழை காரணமாக ரோப் காப் சேவை தடைப்படும்.
இந்நிலையில், மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக ரோப் கார் சேவை திங்கள்கிழமை (டிச.19) ஒரு நாள் மட்டும் இயங்காது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜே.கே டயர் Q4 நிகர லாபம் 80% உயர்வு!

அதர்வா - கயாது லோஹரின் இதயம் முரளி படத்தின் ரிலீஸ் தேதி!

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

டென்டா வாட்டர் அண்ட் இன்ஃப்ரா சொல்யூஷன்ஸ் லாபம் 33% சரிவு!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



