எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

பரந்தூர் விமான நிலையம்: அமைச்சர்கள் குழு நாளை ஆலோசனை

பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் குழு சென்னை தலைமைச்செயலகத்தில் நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளது.

News image
Updated On :19 டிசம்பர் 2022, 6:01 am

DIN

பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் குழு சென்னை தலைமைச்செயலகத்தில் நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளது.

சென்னையின் 2-வது விமான நிலையமாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் ரூ.20,000 கோடி முதலீட்டில் 2028-ம் ஆண்டுக்குள் விமான நிலையம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 4,700 ஏக்கர் பரப்பளவில் புதிய விமான நிலையத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கப்பட்டு விமான நிலையம் அமைக்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம், சர்வதேச ஒப்பந்தப்புள்ளி(டெண்டர்) கோரப்பட்டுள்ளது. 

இதனிடையே, பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு முதலாக, இதை எதிர்த்து ஏகனாபுரம், பரந்தூர் உள்ளிட்ட அனைத்து 13 கிராம பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களது போராட்டம் 150-வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில், போராட்டத்தின் ஒருபகுதியாக, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி இன்று (டிச. 19) பேரணி நடத்தப்படும் என பரந்தூர் விமான நிலைய கிராம மீட்பு ஒருங்கிணைப்புக் குழுவினர் அறிவித்தனர்.

முன்னதாக மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறியும் திட்டமிட்டபடி இன்று பேரணி நடைபெற்றது. அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி கிராம மக்கள் கருப்புக்கொடியுடன் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது, கோட்டாட்சியர், காஞ்சிபுரம் எஸ்.பி. தாசில்தார் ஆகியோர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அமைச்சருடன் நாளை பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. 

இந்த நிலையில் பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் குழு சென்னை தலைமைச்செயலகத்தில் நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. நாளை நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் 13 கிராம மக்களின் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. அமைச்சர்கள் வேலு, தங்கம் தென்னரசு, அன்பரசன் மற்றும் அதிகாரிகள் இந்த ஆலோசனையில் ஈடுபட உள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.