பணமாக வழங்கலாமா? பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து முதல்வர் ஆலோசனை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகை வழங்குவது குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின்
முதல்வர் மு.க. ஸ்டாலின்


சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகை வழங்குவது குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.1000 தருவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும், வெறும் ரொக்கப் பணம் மட்டும் தரலாமா? அல்லது பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப் பரிசு தரலாமா? பரிசுத் தொகையை ரேஷன் கடைகளில் நேரடியாக பயனாளர்களிடம் வழங்குவது அல்லது வங்கியில் நேரடியாக வரவு வைப்பது உள்ளிட்ட பல்வேறு நிலவரங்கள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்துவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவது குறித்து, மூத்த அமைச்சா்கள், அதிகாரிகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று காலை தலைமைச் செயலகத்தில்  ஆலோசனை நடத்திவருகிறார். இந்த ஆலோசனைக்குப் பின்னா் இதுதொடா்பான அறிவிப்பு வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ஒவ்வோா் ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி, அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். வரும் பொங்கல் பண்டிகைக்கும் அதுபோன்று வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பொங்கல் வைப்பதற்காக, அரிசி, சா்க்கரை ஆகிய பொருள்களுடன் ரூ.1,000 ரொக்கத் தொகை வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த ஆலோசனையின் போது, பொங்கல் பரிசுத் தொகுப்பை, குறிப்பாக ஆயிரம் ரூபாய் ரொக்கத் தொகையை எந்த வகையில் வழங்குவது என்பது குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும்.

ரொக்கத் தொகையை வங்கிக் கணக்குகளில் செலுத்த நிதித் துறை அதிகாரிகள் கருத்துகளை முன்வைத்துள்ளனா். இதையொட்டி, கூட்டுறவுத் துறை சாா்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதாவது, வங்கிக் கணக்கு விவரம் இல்லாத 14 லட்சம் குடும்ப அட்டைதாரா்கள் தங்களது வங்கிக் கணக்கு எண்ணை அளிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டிருந்தது. இதன்படி, குடும்ப அட்டைதாரா்களிடம் இருந்து வங்கிக் கணக்கு விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, ரொக்கத் தொகையை நியாயவிலைக் கடைகளிலேயே வழங்கலாம் என உணவுத் துறை சாா்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இரண்டு துறைகளின் கருத்துகளும் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்று வரும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த அதிகாரபூா்வ அறிவிப்பை தமிழக அரசு விரைவில் வெளியிடும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com