திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

விமான நிலையங்களில் கரோனா பரிசோதனை! தமிழக அரசு கடிதம்

சீனா, ஹாங்காங்கிலிருந்து தமிழகம் வருவோருக்கு கரோனா பரிசோதனை குறித்து மத்திய சுகாதாரத் துறைக்கு மாநில சுகாதாரத் துறை கடிதம் எழுதியுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :1 பிப்ரவரி 2024, 4:39 pm IST


சீனா, ஹாங்காங்கிலிருந்து தமிழகம் வருவோருக்கு கரோனா பரிசோதனை குறித்து மத்திய சுகாதாரத் துறைக்கு மாநில சுகாதாரத் துறை கடிதம் எழுதியுள்ளது.

சீனாவில் புதிய வகை கரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், மாநில சுகாதாரத் துறை இந்த கடிதத்தை எழுதியுள்ளது.  

இது தொடர்பாக எழுதப்பட்டுள்ள கடிதத்தில், 

மக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்த வேண்டும்.

சீனா மற்றும் ஹாங்காங்கிலிருந்து தமிழகம் வருவோருக்கு விமான நிலையங்களில் கரோனா பரிசோதனையை கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும். 

கரோனா பரிசோதனை மாதிரிகளில் கரோனா இருப்பது உறுதியானால் அவர்களை தனிமைப்படுத்திக் கண்காணிக்க வேண்டும்.

மேலும், கரோனா பரிசோதனைக்கு உரிய வழிகாட்டுதல் முறைகளை வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் மாநில அரசு கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

குஜராத்தில் பிஎஃப் 7 மற்றும் பிஎஃப் 12 என்ற இரண்டு திரிபு வகை கரோனா இருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.