பொங்கல் தொகுப்பில் ரூ.5000 ரொக்கத்துடன் கரும்பும் வழங்க வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்

பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.5000 ரொக்கத்துடன் கரும்பும் வழங்க வேண்டும் என அதிமுக இடைக்காலப் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.5000 ரொக்கத்துடன் கரும்பும் வழங்க வேண்டும் என அதிமுக இடைக்காலப் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாளை, தமிழக மக்கள் அனைவரும்  மன நிறைவோடு சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்ற உயரிய நோக்கில் ஜெயலலிதா ஆட்சியிலும், அவரைத் தொடர்ந்து எனது ஆட்சியிலும் பொங்கல் பரிசாக ரொக்கம்  மற்றும் செங்கரும்புடன் கூடிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வந்தது. இந்த திமுக அரசும், 2023 ஆண்டு தைப் பொங்கலுக்கு  குடும்ப அட்டைதாரர்களுக்கு செங்கரும்பு வழங்குவார்கள் என்ற எண்ணத்துடன் விவசாயிகள் அதிகளவில் செங்கரும்பு சாகுபடி செய்துள்ளனர். 

நேற்றைய தினம், பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கமும், ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு கிலோ சர்க்கரையும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. தைப் பொங்கல் என்றாலே மக்களின் நினைவிற்கு வருவது செங்கரும்புதான். 

இந்த அரசின் அறிவிப்பில் செங்கரும்பு இடம்பெறாதது, செங்கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் தலையில் இடி விழுந்தது போல் உள்ளது. பொதுமக்களிடையே மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, விவசாயிகளும், பொதுமக்களும் பொங்கல் தொகுப்பில் செங்கரும்பையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும், விவசாயிகள்  தாங்கள் விளைவித்த செங்கரும்பை அரசு கொள்முதல் செய்ய வேண்டும்  என்று தமிழகமெங்கும் பல இடங்களில் ஆர்பாட்டம் செய்து வருவதாக பல ஊடகங்களில் செய்திகள் வலம் வந்த வண்ணம் உள்ளன. சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்று வாய் வீரம் காட்டும் முதல்வர், நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, எங்களிடம் கேட்டபடி, இந்த அரசு தைப் பொங்கலுக்கு ரூ.5,000 ரொக்கத்துடன்  பொங்கல் தொகுப்பில் முழு  செங்கரும்பையும், 2 கோடியே 19 லட்சம்  அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டும் என்றும், அதற்கான  அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் இந்த திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com