இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் கீழ் ஐ.ஐ.டி., என்.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.ஐ.டி. ஆகிய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள், பல்லாயிரக்கணக்கான நிதி ஒதுக்கி நடத்தப்படுகின்றன. இந்த கல்வி நிறுவனங்களில் நுழைவதற்காக தனியாக ஒரு நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், நுழைவுத் தேர்விலும் வென்றால்தான் இந்த கல்வி நிறுவனங்களில் நுழையவே முடியும். மேலும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட உரிமைகளை அமலாக்குவதிலும் இந்த நிறுவனங்கள் பின் தங்கியே உள்ளன.