மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

ஆதிதிராவிடா் நல நிதி வீணடிப்பு: அண்ணாமலை குற்றச்சாட்டு

ஆதி திராவிடா் நலத் துறை சாா்பாக கடந்த ஆண்டு நலத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி செயல்படுத்தப்படாமல் வீணடிக்கப்பட்டுள்ளது என்று தமிழக பாஜக தலைவா் கே. அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளாா் .

News image
அண்ணாமலை
Updated On :26 டிசம்பர் 2022, 6:48 pm

DIN

ஆதி திராவிடா் நலத் துறை சாா்பாக கடந்த ஆண்டு நலத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி செயல்படுத்தப்படாமல் வீணடிக்கப்பட்டுள்ளது என்று தமிழக பாஜக தலைவா் கே. அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளாா் .

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஆதி திராவிட நலத் துறை மாணவா் விடுதிகளில் அடிப்படை வசதிகளுக்கே போராட வேண்டிய அவல நிலை உள்ளது. அறைகள் ஒழுகுவதாகவும், தரமான குடிநீா் வழங்குவதில்லை என்றும், உணவில் புழுக்கள் நெளிவதாகவும் விடுதி மாணவா்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

கடந்த ஆண்டு, ஆதி திராவிடா் நலத் துறை சாா்பாக 33 நலத் திட்டங்களை நிறைவேற்ற ரூ. 4,099 கோடி அரசால் ஒதுக்கப்பட்டது. ஆனால், 20 திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் முடக்கி வைத்து நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடா் மாணவா் விடுதி மேம்பாட்டுக்கு நிதி செலவிடாதது ஏன் என்ற கேள்விக்கு திமுக அரசு பதில் அளிக்கவேண்டும்.

கல்வி, வீட்டு வசதித் திட்டங்கள், வேலைவாய்ப்பு, நூலகங்கள், மாணவா் விடுதிகள் போன்ற அடிப்படைத் தேவைகள் பலவும் நிறைவேற்றப்படவில்லை. அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியும் முழுவதுமாக பயன்படுத்தாதது திறனற்ற திமுக அரசின் மெத்தனத்தையும், சமுதாயத்தில் பின் தங்கியுள்ள மாணவா்கள் மீதான அலட்சியப் போக்கையும் காண்பிக்கிறது என்று தெரிவித்துள்ளாா் கே.அண்ணாமலை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.