புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடுகள் இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கரோனாவை எதிர்கொள்வதற்கான அவரகால தடுப்பு ஒத்திகை தமிழகம் உள்பட நாடு முழுவதும் இன்று தொடங்கப்பட்டது.
நாட்டில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளின் தயாா்நிலையை உறுதி செய்யும் நோக்கில் பல மாநிலங்களின் மருத்துவமனைகளில் செவ்வாய்க்கிழமை சுகாதார ஒத்திகை நடைபெற்று வருகிறது. ஒத்திகைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பு ஒத்திகை குறித்து அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக மருத்துவமனைகளில் 1.75 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாகவும், 1954 டன் ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
புத்தாண்டு, சமய விழாக்கள், அரசியல் கட்சிகள் நடத்தும் நிகழ்ச்சிகள் எதற்கும் கட்டுப்பாடுகள் இல்லை. பொதுமக்கள் சுயக்கட்டுப்பாடுகள் உடன் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
இதையும் படிக்க: சபரிமலையில் மண்டல பூஜை நிறைவு: டிச.29 வரை நடை அடைப்பு!
கரோனா தொற்றுக்காக 2 ஆண்டுகளுக்கு முன் விதிக்கப்பட்ட விதிமுறைகள் இதுவரை தளர்த்தி கொள்ளப்படவில்லை மற்றும் விலக்கி கொள்ளப்படவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.