ஒடிசாவில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் விருந்தினராக கலந்துகொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலம், புவனேஷ்வர்-ரூர்கேலாவில் ஜனவரி 13 முதல் 29 ஆம் தேதி வரை உலகக் கோப்பை ஹாக்கி போட்டி (2023 Men's FIH Hockey World Cup) நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் விருந்தினராக கலந்துகொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முகாம் அலுவலகத்தில் ஒடிசா மாநில கூட்டுறவு, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் அடானு சப்யசாசி நாயக், முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார்.
ஒடிசாவில் வருகிற ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஆண்களுக்கான ஹாக்கி உலகக் கோப்பை போட்டியை காண ஒடிசா மாநிலத்திற்கு விருந்தினராக வருகை தர வேண்டுமென ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் எழுதிய கடிதத்தை வழங்கினார்.
இதையும் படிக்க | பொங்கல் பரிசுத்தொகுப்புடன் கரும்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.