குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

‘திமுகவின் ஆக்சிஜனுடன் காங். ஐசியூவில் இருக்கிறது’: அண்ணாமலை பதிலடி

திமுகவின் ஆக்சிஜன் உதவியுடன் ஐசியூவின் காங்கிரஸ் கட்சி இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

News image
பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை
Updated On :3 பிப்ரவரி 2022, 3:20 am

DIN

திமுகவின் ஆக்சிஜன் உதவியுடன் ஐசியூவின் காங்கிரஸ் கட்சி இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், தமிழகத்தை பாஜகவால் ஒருபோது ஆட்சி செய்ய முடியாது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று மாலை விமர்சனம் செய்திருந்தார்.

இந்நிலையில், ராகுல் காந்தியின் கருத்திற்கு பதிலளித்து அண்ணாமலை வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,

“ராகுல் காந்தி வழக்கம்போல் நாடாளுமன்றத்தில் பொங்கி எழுந்திருக்கிறார். தமிழகத்தை பாஜகவால் ஆட்சி செய்ய முடியாது எனக் கூறியிருக்கிறார்.

தமிழ்நாட்டை சில காலங்களுக்கு காங்கிரஸ் ஆட்சி செய்தது. அப்போது உங்கள் தாத்தா 1965-ம் ஆண்டு ஹிந்தி திணிப்புக்கு வழிவகை செய்தார். பின் 1986-ம் ஆண்டு உங்கள் தந்தையுன் அதை செய்தார். பின், காமராஜரை அவமதித்தீர்கள். உங்கள் பாட்டி 1974ஆம் ஆண்டு கச்சத்தீவை வெளிநாட்டுக்கு கொடுத்தார்.

 2009-ஐ நினைவுகூறுங்கள். இலங்கை தமிழர்களுக்கு நடந்த பிரச்னைகளுக்கு நீங்களே பொறுப்பு. எங்கள் பிரதமர்தான், அவர்களுக்காக 50,000 வீடுகளை கட்டிக்கொடுத்தார்.

இவற்றின் விளைவாக, தற்போது திமுகவின் ஆக்சிஜன் உதவியுடன் ஐ.சி.யூ.வில் இருக்கின்றீர்கள். புதுச்சேரியில் தற்போது நாங்கள் ஆட்சியிலும் இருக்கிறோம். பிரதமரின் தொலைநோக்கு பார்வையை ஏற்றுக்கொண்ட மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இதுவே எங்களின் மாபெரும் வெற்றிதான். அடுத்தது எங்களின் இலக்கு, தமிழகம்தான். தமிழக மக்கள் பாஜக மற்றும் பிரதமருடன் இருக்கின்றனர்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.