மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திமுகவுக்கு பாடம் கற்பிக்கும் தேர்தல்: எடப்பாடி கே பழனிசாமி

பொய்யான வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்த திமுகவுக்கு மக்கள் பாடம் கற்பிக்கும் தேர்தலாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அமையும் என்று அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி கூறினார்.

News image
எடப்பாடி கே பழனிசாமி
Updated On :11 பிப்ரவரி 2022, 12:21 pm

DIN

மதுரை: பொய்யான வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்த திமுகவுக்கு மக்கள் பாடம் கற்பிக்கும் தேர்தலாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அமையும் என்று அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி கூறினார்.

மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்து கோ புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் வெள்ளிக்கிழமை அவர் பேசியது:

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை திமுக அளித்தது. ஆட்சிக்கு வந்த பிறகு அந்த வாக்குறுதிகளை எல்லாம் அக்கட்சி மறந்துவிட்டது. தற்போது முதல்வர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதிகளில் 75 சதவீதத்தை நிறைவேற்றிவிட்டதாக கூறுகிறார். 

ஆனால் முந்தைய அதிமுக அரசு செயல்படுத்திய திட்டங்களை தான் ஒவ்வொன்றாக திமுக அரசு திறந்து வைத்துக் கொண்டிருக்கிறது. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்குவதாக கூறினார்கள். இதுவரை அந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை. கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரை நகை கடன் தள்ளுபடி  செய்யப்படும் என்றனர். 

திமுகவினரின் வாக்குறுதியை நம்பி நகைகளை அடமானம் வைத்தவர்கள் தற்போது நகைகளை திருப்ப முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவிற்கு வாக்களித்தற்காக அபராதம் செலுத்துவதைப் போல நகைக் கடனுக்கான வட்டியை செலுத்திக் கொண்டிருக்கின்றனர். பொய்களை மட்டும் நம்பி திமுக ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.

நீட் தேர்வு குறித்து விவாதிக்க தயாரா என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மத்தியில் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் அரசுதான் நீட் தேர்வு எனும் நச்சு விதையை விதைத்தது என்பதை யாராலும் மறைக்க முடியாது. கடந்த 2010 காங்கிரஸ் ஆட்சியின்போது நீட் தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. அதை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டப் போராட்டம் நடத்தினார். 
உச்சநீதிமன்றத்தில் பலரும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் 2011-இல் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. இதில் இரு நீதிபதிகள் நீட் தேர்வுக்கு எதிராக தீர்ப்பளித்தனர். ஆனால் அப்போதைய காங்கிரஸ் அரசு மீண்டும் சீராய்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அப்போது மத்திய சுகாதாரத் துறையின் இணை அமைச்சராக திமுகவைச் சேர்ந்தவர் தான்  பொறுப்பில் இருந்தார். அந்த சீராய்வு மனுவை தாக்கல் செய்யாமல் இருந்திருந்தால் நீட் தேர்வு வந்திருக்காது. ஆனால் இப்போது நீட் தேர்வுக்கு எதிராக போராடுவது போல திமுக நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறது.

நீட் தேர்வு விஷயத்தில் இரட்டை வேடம் போடுவதை மறைக்க முடியாது. இது குறித்து எப்போது வேண்டுமானாலும் விவாதத்துக்கு தயாராக இருக்கிறோம். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக எந்த சாதனையையும் சொல்லி ஓட்டு கேட்க முடியாது. கடந்த 9 மாதங்களில் மக்களை ஏமாற்றியது தான் அவர்களது சாதனையாக இருக்கிறது. ஆகவே இந்த தேர்தல் திமுகவுக்கு மக்கள் பாடம் கற்பிக்கும் தேர்தலாக இருக்கும் என்றார்.

முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே ராஜூ,  ஆர்.பி. உதயகுமார்,  சட்டப்பேரவை உறுப்பினர்கள் வி.வி. ராஜன் செல்லப்பா பெரிய புள்ளான், ஐயப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.