
சென்னை: சென்னை அருகே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட புழல் சிறைக் கைதி உயிரிழந்தார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
திருவொற்றியூர் அருகே உள்ள சாத்துமாநகர் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சி.கோடீஸ்வரன் (52). இவர் ஒரு குற்ற வழக்கில் தண்டனைப் பெற்று, புழல் மத்திய சிறையில் அனுபவித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 9-ஆம் தேதி சிறையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கோடீஸ்வரன், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கோடீஸ்வரன் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் கோடீஸ்வரன் அங்கு சிகிச்சை பலனின்றி, திங்கள்கிழமை அதிகாலை இறந்தார். இச் சம்பவம் சிறைத்துறை அதிகாரிகளிடமும், கைதிகளிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.