கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

குன்றத்தூர், மாங்காடு நகராட்சிகளில் வெற்றிபெற்ற கணவன்கள், மனைவிகள்

குன்றத்தூர் மற்றும் மாங்காடு நகராட்சிகளில் திமுக, அதிமுக, மதிமுக, சார்பாக போட்டியிட்ட கணவன்கள் மற்றும் மனைவிகள் வெற்றி பெற்று அசத்தியுள்ளனர்.

News image
Updated On :22 பிப்ரவரி 2022, 9:40 am

DIN

ஸ்ரீபெரும்புதூர்: குன்றத்தூர் மற்றும் மாங்காடு நகராட்சிகளில் திமுக, அதிமுக, மதிமுக, சார்பாக போட்டியிட்ட கணவன்கள் மற்றும் மனைவிகள் வெற்றி பெற்று அசத்தியுள்ளனர்.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் குன்றத்தூர் நகராட்சியில் திமுக சார்பில் 18ஆவது வார்டில் போட்டியிட்ட சத்தியமூர்த்தியும், 17ஆவது வார்டில் போட்டியிட்ட சத்தியமூர்த்தியின்  மனைவி பானுசத்தியமூர்த்தியும் வெற்றி பெற்றுள்ளனர்.

அதேபோல் மாங்காடு நகராட்சியில், மதிமுக சார்பில் 9ஆவது வார்டில் போட்டியிட்ட முருகனும், 6ஆவது வார்டில் போட்டியிட்ட முருகனின் மனைவி சுமதியும் வெற்றி பெற்றனர். அதேபோல் மாங்காடு நகராட்சியில் அதிமுக சார்பில் 12ஆவது வார்டில் போட்டியிட்ட ரூசேந்திரகுமாரும், 16ஆவது வார்டில்  போட்டியிட்ட ரூசேந்திரகுமாரின் மனைவி வாணியும் வெற்றி பெற்றுள்ளனர்.

மேலும், மாங்காடு நகராட்சியில் திமுக சார்பில் 25ஆவது வார்டில் போட்டியிட்ட ஜபருல்லாவும், 27ஆவது வார்டில் போட்டியிட்ட ஜபருல்லாவின் மனைவி யாஷ்மினும் வெற்றி பெற்றுள்ளனர்.

குன்றத்தூர் மற்றும் மாங்காடு நகராட்சிகளில் மட்டும் 4 கணவன்களும் அவர்களது மனைவிகளும் வெற்றி  பெற்ற ருசிகர சம்பவம் நடைபெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.