வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சென்னை பெருங்குடியில் மனைவி, 2 குழந்தைகளைக் கொன்று வங்கி அதிகாரி தற்கொலை

சென்னை பெருங்குடியில் மனைவி மற்றும் 2 குழந்தைகளைக் கொன்றுவிட்டு வங்கி அதிகாரி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :5 ஜனவரி 2022, 8:25 am

DIN

சென்னை பெருங்குடியில் மனைவி மற்றும் 2 குழந்தைகளைக் கொன்றுவிட்டு வங்கி அதிகாரி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை பெருங்குடி பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன். தனியார் வங்கி அதிகாரியான இவர் கடன் சுமையால் அவதிபட்டு வந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி பிரச்னை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. 

நேற்று முன்தினம் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே ஆத்திரமடைந்த மணிகண்டன் மனைவி மற்றும் மகன்களைக் கொன்று விட்டு தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

வீடு பூட்டியே இருந்ததைக் கண்டு சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் இன்று துரைப்பாக்கம் காவல்துறையினர் தகவல் கொடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பெருங்குடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.