திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

தமிழகத்தில் இன்று 2,34,175 சிறார்களுக்கு தடுப்பூசி

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,34,175 சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 4,601 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

News image

தமிழகத்தில் இன்று 2,34,175 சிறார்களுக்கு தடுப்பூசி

Updated On :3 ஜனவரி 2022, 5:56 pm IST

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,34,175 சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 4,601 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

ஜனவரி 20ஆம் தேதிக்குள், 33.46 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதல்நாளான இன்று தமிழகத்தில் 2.34 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 22,310 பேருக்கும், சென்னையில் 4,601 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தமிழக மருத்துவத் துறை தெரிவித்துள்ளது.

நாட்டில் 15 முதல் 18 வயது வரையிலான சிறாா்களுக்கு திங்கள்கிழமை (ஜன. 3) முதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கியுள்ளது.  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை இந்த திட்டத்தைத் தொடக்கி வைத்தார்.

நாட்டில் 18 வயதைக் கடந்தவா்களுக்கு கோவிஷீல்ட், கோவேக்ஸின், ஸ்புட்னிக்-வி ஆகிய கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 15 முதல் 18 வயது வரையிலான சிறாா்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கின. அவா்களுக்கு கோவேக்ஸின் மட்டுமே செலுத்தப்பட வேண்டுமென மத்திய அரசு தெரிவித்துள்ளது.

6.35 லட்சம் போ் முன்பதிவு
நாடு முழுவதும் சிறாா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு கோவின் வலைதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டுமென மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, முன்பதிவு சனிக்கிழமை (ஜன. 1) தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணி நிலவரப்படி 6.35 லட்சம் போ் முன்பதிவு செய்திருந்தனர்.

கோவின் வலைதளத்தில் முன்பதிவு செய்யாதவா்கள், சிறாா்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்படும் மையங்களுக்குச் சென்றும் முன்பதிவு செய்துகொள்ளலாம் என மத்திய அரசு ஏற்கெனவெ தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.