தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் குரூப்- 2, குரூப்-4 தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு வாட்ஸ்ஆப்-ல் இலவசமாக ’டி.என்.பி.எஸ்.சி மாதிரி வினாத்தாள்கள்’ அனுப்பப்படும் என்று ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாதெமி அறிவித்துள்ளது.
ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாதெமி சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளார் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ மற்றும் குரூப்-4, வி.ஏ.ஓ உள்ளிட்ட போட்டித் தேர்வுகளின் வெற்றிக்குப் பயன்படும் வகையில் டி.என்.பி.எஸ்.சி புதிய பாடத் திட்டத்தின்படி 2022 ஆண்டு நடைபெற உள்ள தேர்வுகளை கருத்தில் கொண்டு, இந்த டி.என்.பி.எஸ்.சி. மாதிரி வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
5 மாதிரி வினாத்தாள்கள்
டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அதற்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளன. டி.என்.பி.எஸ்.சியில், மீண்டும் சேர்க்கப்பட்டுள்ள திருக்குறள் உள்ளிட்ட புதிய பாடத்திட்டத்தை பின்பற்றி, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 போன்ற தேர்வுகளுக்கு பயன்படும் வகையில் ஐந்து மாதிரி வினாத்தாள்களை இலவசமாக ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாதெமி வெளியிடப்பட்டுள்ளது.
வாட்ஸ்-அப்பில் பதிவு செய்க
இந்த மாதிரி வினாத்தாள்களைப் பெற விரும்புவோர், தங்களது முழு முகவரியுடன் ‘TNPSC Model Question Papers-2022’ என்று டைப் செய்து, 9843511188 என்ற எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். முன்பதிவு செய்த அனைவருக்கும் இ-புத்தகமாக (PDF வடிவில்) 5 மாதிரி வினாத்தாள்கள் அனுப்பப்படும்.
மேலும் விவரங்களுக்கு: ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமி, 142, ஜி.எஸ்.டி ரோடு, குரோம்பேட்டை, சென்னை-44. என்ற முகவரியில் நேரிலோ, 7825813573, 8939467323, 9843511188, 9943955511, 9962600043 ஆகிய எண்களிலோ அணுகலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

2-வது டெஸ்ட்: மாட் ஹென்றி 5 விக்கெட்டுகள்; 291 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து!

எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடிக்க உத்வேகம் அளித்த சத்யராஜ்... விஜய் நேர்காணல் -4!

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
இன்றைய செய்திகள் ஜூன் 19 - நேரலை!
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



