
தஞ்சாவூர்: மகர சங்கராந்தி, மாட்டுப் பொங்கல் பெரு விழாவையொட்டி, தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள மகா நந்திகேசுவரருக்கு ஏறத்தாழ 200 கிலோ எடையுடைய காய்கனிகளால் அலங்காரம் சனிக்கிழமை காலை செய்யப்பட்டது.
இந்த விழாவை முன்னிட்டு, இக்கோயிலில் 12 அடி உயரம். பத்தொன்பதரை அடி நீளம். எட்டேகால் அடி அகலம் கொண்ட மகா நந்திகேசுவரருக்குச் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதையும் படிக்க.. உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுவனுக்காக பள்ளிச் செல்லும் அவதார் ரோபோ
பின்னர், மகா நந்திகேசுவரருக்கு உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், பாகற்காய், கேரட், சௌ சௌ உள்ளிட்ட காய்களாலும், ஆரஞ்சு, சாத்துக்குடி, வாழை, ஆப்பிள் போன்ற பழ வகைகளாலும், இனிப்புகளாலும், செவ்வந்தி, ரோஜா போன்ற மலர்களாலும் அலங்காரம் செய்யப்பட்டது.
இவற்றின் மொத்த எடை ஏறத்தாழ 200 கிலோ இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
பின்னர், மகா நந்திகேசுவரர் முன் கோ பூஜை நடைபெற்றது. இதில் பசு, கன்றுக்குச் சந்தனம், குங்குமப் பொட்டு வைத்து, மாலைகள் அணிவிக்கப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து பசுவுக்குப் பொங்கல் ஊட்டப்பட்டது.
ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும் இவ்விழா கடந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக எளிமையாக நடத்தப்பட்டது. இதேபோல நிகழாண்டும் கரோனா பரவல் காரணமாகப் பக்தர்களின்றி எளிய முறையில் இவ்விழா நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.