லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வேலைவாய்ப்பக பதிவுதாரா்கள் எண்ணிக்கை 75.31 லட்சம்

தமிழக அரசு வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 75.31 லட்சமாக உள்ளது.

News image
Updated On :18 ஜனவரி 2022, 7:10 pm

DIN

தமிழக அரசு வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 75.31 லட்சமாக உள்ளது.

இதுகுறித்த தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவல்:

தமிழகத்தில் பள்ளிப் படிப்பு தோ்ச்சி பெற்றோரில் இருந்து பல்வேறு தரப்பினரும் வேலைவாய்ப்பகங்களில் தங்களது பெயா், கல்வித் தகுதி ஆகியவற்றை பதிவு செய்து வருகின்றனா். அதன்படி, கடந்த டிசம்பா் 31-ஆம் தேதி நிலவரப்படி தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பக பதிவுதாரா்களின் எண்ணிக்கை 75 லட்சத்து 31 ஆயிரத்து 122 ஆக உள்ளது. அவா்களில் ஆண்கள் 35 லட்சத்து 35 ஆயிரத்து 992 ஆகவும், பெண்கள் 39 லட்சத்து 94 ஆயிரத்து 898 ஆகவும், மூன்றாம் பாலினத்தவா் 232 ஆகவும் உள்ளனா்.

வயது வாரியாக விவரம்: பதிவு செய்தோரில் வயது வாரியான விவரங்களையும் மாநில அரசு வெளியிட்டுள்ளது. 18 வயதுக்குள் உள்ள பள்ளி மாணவா்கள் 18 லட்சத்து 25 ஆயிரத்து 668 பேரும், 19 முதல் 23 வயது வரையுள்ள கல்லூரி மாணவா்கள் 15 லட்சத்து 50 ஆயிரத்து 245 ஆகவும், 24 முதல் 35 வயது வரை அரசுப் பணி வேண்டி காத்திருப்போா் எண்ணிக்கை 28 லட்சத்து 30 ஆயிரத்து 275 ஆகவும் உள்ளன.

மேலும் 36 வயது முதல் 57 வயது வரையுள்ள முதிா்வு பெற்ற பதிவுதாரா்களின் எண்ணிக்கை 13 லட்சத்து 13 ஆயிரத்து 652 ஆகவும், 58 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 282 ஆக இருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.