நாடு முழுவதும் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததன் பயனாக, அதிகரிக்கும் எண்ணிக்கை மெல்ல குறைந்து வருகிறது.
கர்நாடகம், தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா உறுதி செய்யப்படும் விகிதமானது குறைந்திருக்கும் நிலையில், சென்னையிலும் தொடர்ந்து 4வது நாளாக கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
சென்னையில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை நேற்று 62 ஆயிரத்து 500 என்ற அளவில் இருந்த நிலையில், இன்று அது 62 ஆயிரம் என்ற அளவுக்குக் குறைந்துள்ளது.
இதையும் படிக்க.. அமர் ஜவான் ஜோதி அணைக்கப்படுவது ஏன்? மத்திய அரசு விளக்கம்
சென்னையில் அதிகபட்சமாக அண்ணாநகர் மற்றும் தேனாம்பேட்டையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் உள்ளனர். குறைந்தபட்சமாக மணலியில் 77 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
வியாழக்கிழமையன்று தமிழகத்தில் 28,561 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அதேவேளையில், சென்னையில் கரோனா உறுதி செய்யப்படும் எண்ணிக்கை 8 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது.
தமிழகத்திலேயே சென்னை, கள்ளக்குறிச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைத் தவிரத்து பிற மாவட்டங்களில் கரோனா பாதிப்பு புதன்கிழமையை ஒப்பிடுகையில் வியாழக்கிழமை அதிகரித்துள்ளது.
சென்னையின் ஒரு நாள் பாதிப்பு 8,007லிருந்து 7,520 ஆகக் குறைந்துள்ளது. அதேவேளையில் 8,011 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.
அதேவேளையில, தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 14 பேர் பலியாகியுள்ளனர். அதற்கடுத்த இடத்தில் செங்கல்பட்டில் 5 பேரும், கோவை, ஈரோடு, திருவள்ளூர், தூத்துக்குடியில் தலா 3 பேர் பலியாகியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்த 3 மணி நேரத்துக்கு 19 மாவட்டங்களில் மழை!

புல்வாமா தாக்குதல் நடத்திய பயங்கரவாதி மர்ம மரணம்!
வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்

நரசிம்மர் ஜெயந்தி: பூவரசன்குப்பம்லட்சுமி நரசிம்மர் கோயிலில் சிறப்பு வழிபாடு!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


